இந்தி திணிப்புக்கு எதிராக பல்லடம் தபால் நிலையம் முற்றுகை - இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் SFI மற்றும் DYFI சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை இரண்டு அமைப்பினரும் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



அதன் அடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழுக்கள் சார்பில் பல்லடம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர்.பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில துணை தலைவர் தோழர்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர்.சௌந்தர்யா, இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

என்.ஜீ.ஆர் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி திணிப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...