கோவை முள்ளுப்பாடியில் கார் மோதி அடையாளம் தெரியாத நபர் பலியான சோகம் - போலீசார் விசாரணை

கிணத்துக்கடவு அடுத்த முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.


கோவை: கிணத்துக்கடவு அருகேயுள்ள முள்ளுப்பாடி ரயில்வே மேம்பால பகுதியில் அடையாளம் தெரியாத நபர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் அந்த நபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியாததால், எஸ்.மேட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...