கோவை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க நகையை அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு

கோவை விமான நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் ரபிக், கீழே கிடந்த 3சவரன் தங்க நகையை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், ஆட்டோ ஓட்டுனருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரபிக். இவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர்களை இறக்கி விட்டு விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கண்ணில் மூன்று சவரன் மதிக்கத்தக்க தங்கச் செயின் தரையில் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை எடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இந்த தங்கச்செயின் யாருடையது என விசாரித்துள்ளார்.

அப்பொழுது யாரும் அதற்கு உரிமை கூறாததால், அந்த தங்க நகையை விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனரை விமான நிலைய உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...