கிணத்துக்கடவு பகுதியில் 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைத்துவிட்டனர் - தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்

கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. அதன் பயனாக இதுவரை 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: சட்டமன்ற தொகுதியான கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 90,038 வாக்காளர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது அவசியமென அறிவிப்பு நாடு முழுக்க வந்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாது கிணத்துக்கடவு தாலுகாவில் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் இதுவரை 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித் துள்ளனர்.

அவர் மேற்கொண்டு கூறியதாவது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம 90 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் மீதமுள்ள 26 ஆயிரத்து 157 வாக்காளர்களுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...