கோவை பேரூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 8 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா போலிஸார் பறிமுதல்

பேரூர் சிறுவாணி மெயின் ரோடு பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கோவை சென்னனூரை சேர்ந்த ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 8 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்த போலிஸார் மேற்படி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.



கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று (27.10.2022) தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்களுடன் பேரூர் சிறுவாணி மெயின் ரோடு தண்ணீர் பந்தல் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நுதன்மிதல்சிவா (33), சுதர்ஸ்லிமா(58) மற்றும் கோவை சென்னனூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (38) ஆகிய 3 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள்.

"வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாமே" சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...