ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருந்த நிலம் மீட்பு

ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் நீா்நிலையை ஆக்கிரமித்து கேரட் மற்றும் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த இரண்டு ஏக்கா் நிலங்கள் மீட்கபட்டன.


நீலகிரி: தமிழகத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

இதில் ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலம் 2 ஏக்கா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த் துறை சார்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அவா்கள் வெளியேறவில்லை. இதைத் தொடா்ந்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிர்வாக அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்தனா்.

அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடம் மீட்கப்பட்டு, நீா்நிலை புறம்போக்கு நிலம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...