கோவை பெரியநாயக்கம்பாளையம் அருகே தடை செய்யப்பட்ட 544 கிலோ குட்கா பறிமுதல் - மூவர் கைது

பெரியநாயக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 544 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில்காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் காவலர்கள் பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகர் பகுதியில்தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கிலோ கணக்கில் தடை செய்யப்பட்டகுட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யூசுப் (31), தாமஸ் (33) மற்றும் தாஜிதின்(42) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 544 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், ஒரு டாடா எசி வாகனம், ஒரு ஆம்னி வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன், போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்.

இது போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் தயங்காமல் காவதுறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பொது மக்கள், 94981-81212 என்ற அலைபேசி எண்ணில், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், 7708-100100 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமும் தொடர்பு கொண்டு தங்கள் தகவல்களை அளிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...