உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி - தேர்வு செய்யப்படும் 15 ஓவியங்களுக்கு தலா ரூ.40,000 பரிசு

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள திருக்குறள் தொடர்பான ஓவிய போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூடத்தின் சார்பில் ஓவிய போட்டி நடைபெற உள்ளது.

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். .

ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச்சாலை,

மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி,

சென்னை-600 113.

கூடுதல் தகவல்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...