கோவை கோட்டை மேடு சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் பிறகு தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீஸார்கள் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோட்டை மேடு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், சதி திட்டம் குறித்தான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை முதல் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அதில் ஒர்ஷாப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற போலீசார் எச்சரித்தனர்.



ஆனால் அதையும் மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...