கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்து அமைப்பினர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கோவை கார் வெடித்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்து அமைப்பினர் மற்றும் கோவில் அறங்காவலர்களிடம் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.


கோவை: கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்துகள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்டோருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள ஹிந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத், அனுமன் சேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மற்றும் கோவில்களின் அறங்காவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்தும், அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அதன் பிறகு கோவை மாவட்டத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் தெரிவித்தனர். இந்நிலையில் வேறு என்னென்ன பாதுகாப்புகள் தேவை என்பன கோரிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

மேலும் கோவையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து அமைப்பினர் கூறும் போது காவல்துறை அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பவம் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் எங்களது ஒத்துழைப்பு கேட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து எங்கள் தரப்பில் இருந்தும் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்புகள் தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...