கேரளாவில் பறவை மற்றும் பன்றி காய்ச்சல் எதிரொலி: கோவை - கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்….!

கோவைக்கு வரும் கோழி, கால்நடை, முட்டை மற்றும் தீவனங்கள் ஏற்றிச் சென்று திரும்ப வரும் வாகனங்கள் கிருமி நாசினிகள் தெளித்து தொற்று நீக்கம் செய்யப்பட்ட பிறகே, மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் காரணமாக 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து,ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவைக்காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில்,கடந்த வாரம் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், 25 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால், தமிழக - கேரளா எல்லைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை துவங்கினர். இந்நிலையில் கேரளா மாநிலம் கோட்டையத்தில் பன்றி காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டதால் மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடைத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக, கோவை மாவட்ட எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.



கோவைக்கு வரும் கோழி, கால்நடை, முட்டை மற்றும் தீவனங்கள் ஏற்றிச் சென்று திரும்ப வரும் வாகனங்கள் கிருமி நாசினிகள் தெளித்து தொற்று நீக்கம் செய்யப்பட்ட பிறகே,மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சல் இல்லை என்ற சான்றிதழ் இன்றி கோழி, வாத்துகள், கால்நடைகளுடன் வரும் வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்படுகிறது.

குறிப்பாக, கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச் சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு பெங்களூரில் இருந்து பல்லடத்திற்கு கோவை - வாளையாறு வழியாக வாத்துக் குஞ்சுகளுடன் வந்த வாகனத்தை கால்நடை துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், கோவை மாவட்டத்தில் உள்ள பல்லடம், அன்னூர், புளியம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...