கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் புது மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து அவகாசம் கேட்டுள்ளார்.


நீலகிரி : கொடநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல்சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முதலாவதாக ஓம் பகதூர்கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த சிபிசிஐடிகாவல் துறையினர் எஸ்டேட் மேலாளர் நட்ராஜ் மற்றும் அப்போது பணியில் இருந்தர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்,

இது தொடர்பாக ஏற்கனவே சயான்,வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் சயான் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினர்.

இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தி்ல் நடந்த வழக்கில்அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



இந்த மனுவில்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார்விசாரணையை துவங்கியுள்ளதால் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதீபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 2 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பிகளாக முருகவேல், சந்திரசேகர், அண்ணா துரை ஆகியோர் சிறப்பு புலனாய்வு விசாரணைஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...