115 வது தேவர் ஜெயந்தி: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

தேவர் குரு பூஜை மற்றும் 115 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் உருவபடத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.


கோவை: 115 வது தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, கோவை இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மேளதாளம் முழங்க கரகாட்டம், வாள் வீச்சு, குச்சி சண்டை என வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், துணைச் செயலாளர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...