பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவிலிருந்து உதகைக்கு முட்டை, இறைச்சி கொண்டு வர தடை - நீலகிரி ஆட்சியர் உத்தரவு..!

கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக 1,500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், அங்கிருந்து முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை உதகைக்கு கொண்டு வர தடை விதித்து நீலகிரி ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி: கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணை ஒன்றில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. அப்போது வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதன் காரணமாக தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக உதகைக்கு வந்து செல்கின்றனர்.

இதன் மூலம் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார்.

இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் ஆகிய 8 சோதனை சாவடிகளிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதற்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...