திருப்பூரில் பலகார சீட்டு நடத்தி ரூ.2.90 கோடி மோசடி - தலைமறைவான குற்றவாளியை பிடித்து பணத்தை மீட்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு அருகே பலகார சீட்டு நடத்தி ரூ.2.90 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான குமார் என்பவரை கைது செய்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் செரங்காடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி மளிகை கடை நடத்தி வந்தவர் வசந்தகுமார். இவர் மளிகை கடை மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் மாத மற்றும் வார தவணை அடிப்படையில் பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வசந்தகுமார் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்டோர் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டில் சேர்ந்துள்ளனர் . வாரம் தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணைத் தொகையாக செலுத்தி வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த தீபாவளி பண்டிகைக்கு தர வேண்டிய பணத்தை, வியாழக்கிழமை தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் புதன்கிழமையுடன் குடும்பத்தோடு வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.



மேலும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கள் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி மனு அளித்துள்ளனர் .

ஆனால் ஒரு வார காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் குமாரிடம் 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் வரை சீட்டுக்காக பணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...