நீலகிரி அருகே குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 6 காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுபாளையம் செல்லும் சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே முகாமிட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி சாலைகளில் சுற்றித்திரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மேலும் அவ்வப்போது, வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த யானைகள் சாலையோரம் உள்ள அடர்ந்த சோலைகளில் உள்ள பழங்களையம், தாவரங்களையும், மூங்கில்களையும் உண்டு வருகின்றன, இவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து விடாமல் வனத்துறையினர் தாெடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இருப்பினும் இந்த யானைகள் எந்த நேரத்திலும் சோலைப் பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும் யானைகளையும் வாகன போக்குவரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...