கோவை வேளாண் பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை அலுவலர்களுக்கு பூச்சியியல் துறையில் திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்ற புலம்பெயர் பூச்சியான ஊசித் துளைப்பானை கட்டுப்படுத்துவது குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்புப் பயிற்சியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளியில் புலம் பெயர் பூச்சியான ஊசித்துளைப்பான் சேதம் அறிகுறி கண்டறிதல் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது.



இந்நிகழ்வானது பயிர்ப் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மூ.சாந்தி தலைமை நடைப்பெற்றது. இந்நிகழ்வை பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் மா. முருகன் வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார்.

பின்னராக தக்காளிப் பயிரை தாக்கும் புலம் பெயர் பூச்சிகள் மற்றும் தற்சார்பு முறையில் அவற்றை கட்டுப்படுத்தவது குறித்த விளக்க உரையை பயிர்ப் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மூ.சாந்தி ஆற்றினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வெ.பாலசுப்ரமணி புலம்பெயர் பூச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.



இந்த பயிற்சியில் தைவான், உலக காய்கறி மையம் விஞ்ஞானி முனைவர். பவுலா சொட்டிலோ கார்டோனா தோட்டக்கலை அலுவலர்களுக்கு பூச்சி கொல்லிகளால் ஏற்படும் விளைவுகளையும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு வழிமுறைகளை எளிய முறையில் கடைபிடிக்கும் உத்திகளையும் தக்காளிப் பயிரில் அவற்றை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.



முனைவர்.செ.வ. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, முனைவர்.கா,கார்த்திகேயன், பேராசிரியர் மற்றும் தலைவர், நோயியல் துறை மற்றும் முனைவர் அ.சாந்தி, பேராசிரியா மற்றும் தலைவர், நூற் புழுவியல் துறையாளர்கள் இப்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மைகள் குறித்த சிறப்பு விளக்கம் அளித்தனர்.

முனைவர்.ந.ஆனந்தராஜா, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் விரிவாக்க பயிற்சி மையம் கலந்த கொண்ட அலுவலர்களின் இப்பயிற்சி சார்ந்த திறன் மதிப்பீட்டை ஆய்வு செய்து உரையாற்றினார்.

முனைவர்.ந.மணிகண்டபூபதி, பேராசிரியர் (உயிர் தொழில்நுட்பவியல் தோட்டக்கலைப் பயிர்களில் வைரஸ் நோய் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து உரையாற்றினார்.

பூச்சியின் வாழ்க்கைச்சரிதம் மற்றும் தாக்குதல் அறிகுறிகள் அடங்கிய மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பூச்சியின் வாழ்க்கைச்சுழற்சி மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு உள்ளடக்கிய பயிற்சி தொழில்நுட்ப கையேடு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இப்பயிற்சியின் தொடர்ச்சியாக பிற்பகலில் தொண்டாமுத்தூர் வட்டாரம், வண்டிக்காரனூர் பிரிவு கிராமத்தில், தக்காளியில் ஊசி துளைப்பான் மேலாண்மை குறித்த நேரடி செயல் விளக்க திடல்களைப் பார்வையிட்டு பயன்பெற்றனர். இறுதியாக முனைவர்.பா.ச.சண்முகம், இணைப் பேராசிரியர், பூச்சியியல் துறை அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...