கோவை ராமநாதபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீபதி நகர் கருப்பராயன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீபதி நகரில் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரமேஷ் (58) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பூசாரி ரமேஷ் நேற்றைய தினம் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5,000 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி ரமேஷ், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பூசாரியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...