கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு பகுதிகளில்ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87,92,மற்றும் 88க்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மேலும் மத்திய மண்டலம்‌ நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாணவ,மாணவிகளுக்கான தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண் 87க்குட்பட்ட குனியமுத்தூர்‌, அன்னமநாயக்கனார்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும்‌ குனியமுத்தூர்‌, ஜி.எம்‌.நகரின்‌ சாலையோரங்களில்‌ கொட்டப்படும்‌ குப்பைகளை சிசிடிவி பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கவும்‌, கடை, வணிக பகுதிகளில்‌ நள்ளிரவு நேரங்களில்‌ குப்பைகளை எடுக்கவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்‌.

பின்னர்‌ அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை போர்கால அடிப்படையில்‌ தூார்வாரவும்‌, சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

அதனைத்தொடர்ந்து, வார்டு எண்‌.92க்குட்பட்ட சுகுணாபுரம்‌ காமராஜர்‌ நகரில்‌ உள்ள பாதாள சாக்கடை பணி விரைவாக துவங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட அபிராமி நகர்‌ மழைநீர் வடிகாலில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்‌ வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மண்டலம்‌ நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து, வ.உ.சி.மைதானம்‌ மற்றும்‌ எல்‌.ஐ.சி.அலுவலகம்‌ வழியாக மீண்டும்‌ நேரு விளையாட்டரங்கத்திற்கு செல்லும்‌ 200க்கும்‌ மேற்பட்ட பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ கலந்து கொண்ட தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை (National Unity DAY -"Rashtriya Ekta DAIWAS" -2022) மாநகராட்சி

ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.



இந்த ஆய்வின்போது ரா.வெற்றிசெல்வன்‌ மற்றும் தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினா்‌ பாபு, உதவி ஆணையர்கள்‌ மகேஷ்கனகராஜ்‌, ௮ண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலர் ரகுகுமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா, சுகாதார அலுவலர்கள்‌ ராமு, ராமச்சந்தின்‌, உதவி பொறியாளர்கள்‌ கணேசன்‌,கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபா உட்பட பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் 200க்கும்‌ மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்‌ மேலும் மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...