கோவை சி.எஸ்.ஐ கல்வி நிறுவங்களின் புதிய கல்விக்குழு கன்வீனர் தேர்வு


சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள், பட்டையைப் படிப்பு கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பள்ளிகள் என இருநூற்றுக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிறுவகிப்பதற்கான கூட்டுக் குழு கன்வீனர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். அதன்படி கடந்த 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேரவைத் தேர்தலில் கல்விக்குழு கன்வீனராக டாக்டர். ஏ.சந்திரன் தேர்வு செயப்பட்டார். 

கோவை பந்தைய சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலாளர் பால்செல்வின் பிரபுதாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக் கூறினார். பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, செய்தி வெளியிட்டுள்ள கன்வீனர் டாக்டர் ஏ.சந்திரன் தற்போது கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையில் நிறைய இடைவெளி உள்ளது. கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் படித்து வெளியில் வரும் மாணவர்களில் 27 சதம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கு என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே, சி.எஸ்.ஐ. கல்வி நிறுவங்களில் மாணவர்களுக்கு கல்வியுடன், வேலை வாய்ப்பை பெறுவதற்கான தகுதி பயிற்சியும், மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...