குன்னூர் அவாஹில்லில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான மலையேற்றத்தில் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா பங்கேற்றார்

குன்னூர் அவாஹில் மலையேற்ற முகாமில் பங்கேற்ற விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி சிறப்பித்தார்.



குன்னூர்: அகில இந்திய என்சிசி மாணவ மாணவியரின் மலையேற்ற முகாம் குன்னூர் அவாஹில்லில் நடைபெற்றது.



இதில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியக் குடிமகனும், அசோக சக்ரா விருது பெற்றவருமான, விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துகொண்டார். அவரை முகாம் கமாண்டன்ட் கர்னல் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.



முகாமில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய ராகேஷ் ஷர்மா மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்றார்.

நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.



எந்த தடங்கல்களிலும் ஊக்கமளிக்கும் ஆன்மாவை நிறுத்தாது என்றும், உந்துதல் உள்ளிருந்து வெளிபட வேண்டும் என்றும் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியர்களிடம் ஊக்குவிக்கும் படி பேசினார்.

மேலும் தொழில்நுட்ப உலகில் இந்திய அறிவின் தேவை மிக முக்கியமானது என்றார். மேலும் தேசத்திற்கான கடமையைச் செய்வதன் மூலம் மரியாதையை சம்பாதிக்க முடியும் என கூறினார்.



இந்நிகழ்வில் தலைமை விருந்தினருக்கு கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவுப் பரிசு வழங்கி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...