வட புதூர் ஊராட்சி பாரதி நகரில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது

கிணத்துக்கடவு வட புதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வட புதூர் ஊராட்சியில் பாரதி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடபுதூர் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



பாரதி நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் வடபுதூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.



இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...