கல்லறை திருநாள்: கோவையில் முன்னோர்களின் கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்திலும் முன்னோர்களின் கல்லறைகளை சீரமைத்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்‍கப்படுகிறது.

இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.



அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்திலும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து வர்ணம் பூசி அலங்கரித்தனர்.

பின்னர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது குடும்பத்தினருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்து கொண்டனர்.

இதனால் தங்களின் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...