கோவையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க 43 மருத்துவ குழுக்கள் அமைப்பு - அரசு மருத்துவமனை டீன் நிர்மலா

சுகாதாரத்துறை சார்பில் 43 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை அன்னுார், சூலுார், வால்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.



கோவை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளநிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க, 43 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது, கோவையில் கடந்த சில தினங்களாக, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளிடம்இருந்து பெறப்படுகின்றன. கோவை புறநகர் மற்றும் மாநகராட்சி பகுதிகள் என, 240க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 43 காய்ச்சல் முகாம் குழுக்களும், 17 அதிவிரைவு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர், பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் மாணவ - மாணவிகளை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

மேலும், குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சுகாதாரத்துறையினருக்கு, கூட்டம் நடத்தி டெங்கு அதிகம் இருக்கும் பகுதிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசியதாவது, பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 2 ஐ.சி.யூ படுக்கைகளும் உள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர், அன்னுார், பெரியநாயக்கன் பாளையம், சூலுார், தொண்டாமுத்துார், வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறியாக முதலில் தலைவலி, சளி, உடல்வலி, வயிற்று போக்கு ஏற்படும். அவ்வாறு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதாலும், குளிர்ந்த நீரை குடிப்பதாலும் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது மட்டுமின்றி, சுற்றுவட்டாரங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...