கோவையில் துணி துவைத்த போது தரை மட்ட தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சோகம்

பொள்ளாச்சி அருகே வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி செல்வநாயகம் திடீரென தரைமட்ட தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் தம்பா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (52). இவர் தனது மகன் செந்தில்குமாருடன் தங்கி விவசாய பணிகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், செல்வநாயகத்திற்கு ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு பிரச்சனை இருந்ததால் அவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனிடையே நேற்று வழக்கம் போல வீட்டின் அருகே செல்வநாயகம் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தரை மட்ட தொட்டியில் தவறி விழுந்தார். இதைக்கண்ட செந்தில்குமார், உடனடியாக செல்வநாயகத்தை மீட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த அவசர கால மருத்துவர்கள் செல்வநாயகத்தை சோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக கோட்டூ்ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென தரைமட்ட தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...