கோவையில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த நண்பரை கத்தியால் குத்திய இளைஞர் - பரபரப்பு

கோவை குறிச்சி பிரிவு பேருந்து நிலையத்தில் கமலக்கண்ணன் என்பவர் தனது நண்பர் அந்தோனி என்பவரிடம் குடிக்க பணம் கேட்டு அவர் மறுத்ததால், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிட்கோ காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மகன் அந்தோணி நிக்சன் (26) ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது நண்பரான ஞானசீலன் என்பவரை பார்க்க குறிச்சி பிரிவு பேருந்து நிறுத்ததிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பழக்கமான கமலக்கண்ணன் (25) என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தோணி மது போதையில் இருந்ததால் கமலகண்ணனும் மது குடிக்க ரூ.200 கேட்டுள்ளார். அப்போது, அந்தோணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கமலகண்ணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியின் முகத்தில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை ஞானசீலன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...