தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளி, வேளாண் சந்தை, ஆரம்ப சுகாதாரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்‌

கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



கோவை: தொண்டாமுத்தூர் பூலுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.



மேலும் அங்குள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு மேற்கொண்டு சத்துணவு குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி வேளாண் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்குள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



அதனையடுத்து பேரூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்து குறிப்பேடுகளை ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...