கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: சுந்தராபுரம் ஈஸ்வரன் கோயில் வீதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி அப்பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்களது மகன் சஞ்சய், தாய்க்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் பொள்ளாச்சி சாலையில் குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சுந்தராபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சஞ்சயின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

படுகாயமடைந்த சஞ்சயை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...