கோவை மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.


கோவை: கோவையில் உள்ள பிரசித்திபெற்ற மருதமலை கோவில் அடிவாரத்தில் சாலையின் இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பழங்கள், பூக்களை வாங்கி வருவதோடு, வீட்டிற்கு செல்லும் போது குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டு சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.



இதனையடுத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற கோரி நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கிய நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகள் அகற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...