பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் உலா வந்த சிறுத்தை - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி குட்டை பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டத்தை சிலர் கண்ட நிலையில் சிசிடி காட்சி மற்றும் காலடி தடத்தை கொண்டு சிறுத்தை என உறுதி செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சிறுத்தை உலா வந்ததாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அடுத்த கரடிவாவி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் விசைத்தறி உள்ளிட்டவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் நந்தவன தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தி உள்ளது.

நேற்று நள்ளிரவு மர்மமான விலங்கு ஒன்று தோட்டத்தை கடந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். சிறுத்தை போன்று இருப்பதாக சந்தேகம் அடைந்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

அதில், அந்த மர்ம விலங்கு சிறுத்தைதான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை சிறுத்தையின் காலடி தடங்களை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மூலம் ஆய்வு செய்ததில், அது சிறுத்தையின் காலடித்தடம் தான் என்பதும் உறுதியானது.

நந்தவன குட்டைக்குள் ஏற்கனவே நரிகள் இருப்பதாக சந்தேகம் இருந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தையும் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் இங்கு பிரதானமாக இருப்பதால் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தான சூழல் இருந்து வருகிறது.

எனவே, வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தையை குண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...