கோவை 5வது வார்டில் ஆலமரத்தடியில் நடைபெற்ற நகர சபை கூட்டம் - குறைகளை முன்வைத்த மக்கள்

5வது வார்டு மாநகராட்சியில் இணைந்து 10 ஆண்டுகளாகியும் அடிப்படை வளர்ச்சி அடையாததை அரசுக்கு தெரிவிக்கவே கிராம சபை போல் மரத்தடியில் நகர சபை கூட்டத்தை நடத்தியதாக மாமன்ற உறுப்பினர் GV நவீன்குமார் தெரிவித்தார்.



கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியின் 5வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், விசுவாசபுரம், ரெவென்யு நகர், செந்தில் நகர், திருக்குமரன் நகர், இன்கம் டேக்ஸ் காலனி, குழந்தைவேலு நகர், டெக்ஸ்டூல் நகர், சோமேஸ்வரர் நகர், இன்ஜினியரிங் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.



இன்று காலை 10:30 மணி அளவில் இன்கம்டேக்ஸ் காலனி பூங்காவில் உள்ள ஆலமரத்தடியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்ற மக்கள், தங்களது பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கோரிக்கைகளாக எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்தனர்.



இந்த கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் G.V.நவீன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி வார்டு சபா செயலாளர் மனோரஞ்சிதம், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகர சபா பிரதிநிதி பிரான்சிஸ் அனைவரையும் வரவேற்றார்.



இந்த கூட்டத்தில், சுகாதார அதிகாரி அன்சார், திமுக நிர்வாகிகள் கண்ணன், சுந்தர், மயில்சாமி, சின்னச்சாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரகுராமன், கோபால், தாஸ், முருகேசன், முருகானந்தம், ரங்கசாமி, பாலு, கம்யூனிஸ்ட் கந்தசாமி, கொமதேக நிர்வாகிகள் கந்தசாமி, வேலுச்சாமி மற்றும் பல்வேறு நகர் நல அமைப்பு நிர்வாகிகள் அமிர்தராஜ், சக்திவேல், இளங்கோவன், LIC சுந்தரம்,வடிவேல், CTC ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



10 ஆண்டுகளாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 5வது வார்டு, அடிப்படை வளர்ச்சியில் கிராம ஊராட்சியாகவே இருப்பதால், இதை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக நகர சபையை, கிராம சபா போல் மரத்தடியில் நடத்தப்பட்டதாக மாமன்ற உறுப்பினர் GV நவீன்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...