நீலகிரி அருகே மாடுகளை வேட்டையாடும் புலி - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி அருகே கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் புலியால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகே உள்ள ஓசிஎஸ் காலனி பகுதியில் சுற்றி திரியும் புலி சில தினங்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றை வேட்டையாடியது.



இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் ஒரு பசுமாட்டை புலி வேட்டையாடி சாப்பிட்டதுடன் அதன் அருகிலேயே அமர்ந்திருந்த காட்சியை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.



எனவே புலியை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...