பல்லடம் அருகே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மூன்று பேர் ஒருவரை ஒருவர் தாக்கினர்

பல்லடம் அருகே ஹெட்போன் தராததால் நண்பர்களுக்குள் தகராறு. ஓடும் பேருந்தில் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியதில் கார்த்தி என்பவருக்கு தலையில் காயம். போலிசார் விசாரணை நடத்தி வருகினறனர்



கோவை: கோவையிலிருந்து சிவகாசி செல்லும் பேருந்தில் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மதுரையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சேது என்பவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து பயணித்து வந்துள்ளனர்.

அப்போது கார்த்திக் என்பவரின் ஹெட்போனை ராஜேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பல்லடம் அருகே பேருந்து வரும் போது கார்த்திக் ராஜேஷிடம் எனது ஹெட் போனை தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதில் ராஜேஷ் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சேது ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தி சரமாரியாக தாக்கி உள்ளனர்.



இதில் கார்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் மற்றும் சேதுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பல்லடம் அருகே பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...