கோவையில் நடக்கவிருந்த பெரும் சிலிண்டர் விபத்தை தடுத்த தம்பதியினர் - குவியும் பாராட்டுகள்

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவை துரிதமாக செயல்பட்டு கை கால்களில் தீக்காயங்களுடன் சுற்றுவட்டார பகுதிகளை நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


கோவை: பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியில் உள்ள சுப்பையா. அவரது மனைவி அடைக்கலம் தள்ளுவண்டி கடை நடத்தி வருகின்றனர்.

நாள்தோறும் சாப்பாடு தயார் செய்து அதனை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொண்டு வருகிறார்.



அதேபோல் இன்றும் வீட்டில் சாப்பாடு செய்வதற்காக கேஸ் அடுப்பை பயன்படுத்தும் பொழுது கேஸ் அடுப்புக்கும் சிலிண்டருக்கும் இடையில் உள்ள பைப் கனெக்சன் உருகி எரிவாயு கசிந்து தீ பிடித்துள்ளது.



அடுப்பின் அருகில் இருந்த சுப்பையா மற்றும் மனைவி அடைக்கலம் உடனடியாக சிலிண்டர் மேல் தண்ணீர் நிரப்பிய சாக்கை வைத்து சிலிண்டர் மேலும் கசியாமல் இருக்க மூடி உள்ளனர்.

இதனால் பெரும் சிலிண்டர் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. நெருப்பை அணைக்கும் பொழுது மனைவி அடைக்கலம் என்பவருக்கு கையிலும் காலிலும் நெருப்பு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனே விபத்து குறித்து தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சப்ளை செய்யும் அலுவலகத்திற்கும் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டர் கசிவை துரிதமாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தம்பதிகளுக்கு அந்த பகுதி முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...