நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு சென்ற சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகை அருகே இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வரும் நிலையில் உடனடியாக அதனை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தமிழக விருந்தினர் மாளிகையின் பின்புறம் வெஸ்டோட குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழக விருந்தினர் மாளிகைய சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று உலா வருவதாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட்டோட குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வீட்டின் இரண்டாவது மாடியில் வெளியில் உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி விருந்தினர் மாளிகை அருகேயுள்ள புதருக்குள் சென்று மறைந்துள்ளது.



இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் நாயை தேடிய போது, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, நாயை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு சென்ற காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள் வனத்துறையினர் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...