கோவை வார்டு எண்: 11 வால்பாறையில் கிராம சபை கூட்டம் - கோரிக்கைகளை மனுவாக வழங்கிய மக்கள்

வால்பாறையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள பிரச்சினைகளை மனுவாக வார்டு உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கிய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



கோவை: கோவை வால்பாறை பகுதியில் 11வது வார்டுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



வார்டு உறுப்பினர் செந்தில்குமார்  தலைமையில் காமராஜ் நகர பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காமராஜ் நகர், துளாசிங் நகர், நடுமலை, பச்சமலை, ஆகிய பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டனர்.



மேலும் இந்த கூட்டத்தில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகராட்சி மேலாளர் சலாவுதீன் ஆகியோர்களின் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுக்களாக எழுதி, வார்டு உறுப்பினர் செந்தில்குமார்,   à®¨à®•ராட்சி ஆணையாளர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் வழங்கினர்.

பொதுமக்கள் வழங்கிய மனுவில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும். சாக்கடை கால்வாய் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நகர மன்ற கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று நகர மன்ற தலைவர் உறுதியளித்தார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...