பால் கொள்முதல் விலையை 10சதவீதம் உயர்த்த வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை 10 சதவீதம் உயர்த்த வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.



கோவை: பசும் பால் மற்றும் எருமை பால் விலையை உயர்த்தி தமிழக அரசு நேற்றைய தினம் (03.11.2022) அறிவித்தது. அதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் பால் கொள்முதல் விலையை 10 சதவீதம் உயர்த்த வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனமான தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்ளிட்டவை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் பால் விலை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...