கோவையில் பட்டய கணக்காளர்கள் தொடர்பான சிறு,குறு, நடுத்தர நிறுவன யாத்திரை வாகனத்தை கொடியைசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ICAI MSME யாத்ராவை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.


கோவை: 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதில் பட்டயக் கணக்காளர்கள் ஆற்றிய பங்கை அங்கீகரிப்பதற்காக 75 நகரங்களில் 75 நிகழ்ச்சிகளுடன் கூடிய் ICAI MSME யாத்ரா 75 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்த யாத்திரையின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய ஆடிட்டர் அசோசியேஷன் தலைவர் சி.ஏ.ஈஸ்வர் மற்றும் சி.ஏ இன்ஸ்டிடியூட் கிளை தலைவர் சி.ஏ.என்.வி பழனிசாமி, துணைத் தலைவர் சி.ஏ.டி.நாககுமார், பொருளாளர் சி.ஏ.ராகுல், சி.ஏ., மாணவர் சங்கத் தலைவர் சி.ஏ.சர்வஜித், கமிட்டி உறுப்பினர்கள் சி.ஏ.தங்கவேல், சி.ஏ.சதீஷ் கலந்து கொண்டனர்.

மேலும் தென்னிந்திய முன்னாள் தலைவர் CA.K.ஜலபதி மற்றும் கிளையின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.



இந்த யாத்திரை வாகனம் நகரம் முழுவதும் பயணித்து முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு MSME திட்டங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும்.



ICAI இன் உறுப்பினர்கள், MSMEகள் மற்றும் திட்டங்கள் பற்றிய ஃபிளையர்கள் / பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க பேருந்தில் பயணிப்பார்கள்.

இன்று மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை, ICAI இன் துடியலூர் கிளை வளாகத்தில் MSME திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை மேயர் கல்பனா அனந்தகுமார் துவக்கி வைக்கிறார்.

இதில், பல்வேறு நிதி நிறுவனங்களின் புகழ்பெற்ற ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் MSME கொள்கை / திட்டங்கள் பற்றி உரையாற்றுகின்றனர். பட்டயக் கணக்காளர் சகோதரத்துவத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், தொழில்முனைவோர், பல்வேறு தொழில்/தொழில்துறை அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், MSME-க்காக ICAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மாநில அரசு தமிழக அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...