கோவையில் அலைக்கழிக்கும் அம்மா வீடு திட்டம் - 5 ஆண்டுகாளாகியும் பயனில்லை விவசாய கூலி புலம்பல்

கோவை பூளுவப்பட்டியில் அம்மா வீடு திட்டத்தில் கட்டிய வீட்டிற்கான மானியத்தை பெற 50க்கும் மேற்பட்ட முறை அரசு அலுவலகத்திற்கு சென்று அல்லாடி வரும் விவசாய கூலிகள்.


கோவை: கோவை பூளுவப்பட்டி, கிளியகவுண்டன் பாளையம், லட்சுமிநாராயணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னசாமி காட்டு வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் சரவணக்குமார் (40). இவரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2017 ல் (அம்மா வீடு) அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து, வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளனர்.

பணி நடைபெற்று வந்த நிலையில் மிக தாமதமாக 3 தவணைகளில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சரவணகுமார் தெரிவித்ததாவது:-



வீடு முழுமையாக கட்டி முடித்த நிலையில், நிலுவையில் உள்ள இறுதி மானியம் ரூ.60 ஆயிரத்தை கடந்த 3.5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் அலைக்கழிப்பதாக சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது வரை பேரூராட்சி அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட முறையும், ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 10 முறையும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடு கட்ட ரூ.6 லட்சம் வரை ஆகியுள்ளதாகவும், இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கூலி வேலை செய்து கடனை அடைத்து வரும் நிலையில், அம்மா வீடு திட்டத்தில் வழங்கப்படுதாக கூறிய 2.10 லட்சம் மானியத்தில் இறுதி கட்ட தொகையை நிலுவையிலேயே வைத்துள்ளனர்.

மேலும் இந்த மானிய தொகையை கேட்க ஒவ்வொரு முறையும் செல்லும் புதிய அதிகாரிகள் வருவது, அதிகாரிகள் இல்லாமல் இருப்பது என வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

இதற்காகவே உழைத்து சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்து வருவாதாக தெரிவித்தார். அதிகாரிகள் கடந்த 3.5 ஆண்டுகளாக மானியத்தை வழங்காமல் அலைகழித்து வரும் நிலையில் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இதே போல அப்பகுதியில் சுமார் 7 பேருக்கு இதே நிலை நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...