கோவை உக்கடம் அருகே பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்பு

கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் முருகன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.



சுமார் 3 மணி நேர சோதனையின் போது வீட்டில் இருந்த சுமார் 4 அடியுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருந்தது தெரியவந்தது.



அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டில் கண்டறியப்பட்ட சிலையும் அவரே செய்த சிலை என தெரிவித்ததாகவும், இது குறித்த விடியோவையும் போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது.



இருப்பினும், சிலையின் பழமை தன்மை மற்றும் மற்ற விவரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...