கோவை பேரூர் அருகே கஞ்சா விற்க முயன்ற முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் உட்பட இருவர் கைது – 3.2 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்த போது அவர்களது வாகனத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பேரூர் செட்டிபாளையம் பகுதியை முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி (43), வடவள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) என்பதும் இவர்கள் உள்ளூரில் கஞ்சா விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...