திருப்பூரில் இரண்டு மினி பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தவர் கைது

திருப்பூரில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்து முன்விரோத செயலில் மினி பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த சுபாஷ் என்பவரை போலிசார் கைது செய்தது.



திருப்பூர்: திருப்பூர் நல்லூர் அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (25). இவர் திருப்பூரிலிருந்து மங்கலம் தடத்தில், செல்கிற மினி பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே வழித்தடத்தில் மற்றொரு தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக செல்லம் நகரை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே மினி பஸ்களில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31ந் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பூரில் இருந்து மங்கலத்திற்கு தனியார் பஸ்சை ஏசுதாஸ் ஓட்டி சென்ற போது, சின்னாண்டி பாளையம் அருகே மினி பஸ் வந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுபாஷ் கோபத்தில் கல்லால் தாக்கி மினி பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தார்.



இந்த சம்பவம் குறித்து ஏசுதாஸ் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...