திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரிண்டர் செயலி மூலம் ஒருவரை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...