கோவை சரவணம்பட்டி அருகே குடிபோதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவர் கைது

சரவணம்பட்டி அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கோவையை சேர்ந்த மோகன்ராஜ், நீலகிரியை சேர்ந்த சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). கூலி தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (3.11.2022) இரவு வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள நகர் நல மையம் அருகே சிலருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.

இந்நிலையில் மறுநாள் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அங்கு பணிக்குச் சென்ற தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (26), மற்றும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சரவணன் (19) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் இருவரும் தற்போது கணபதி பகுதியில் சாலை ஓரத்தில் தங்கிக் கொண்டு கூலி வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று வெங்கடேஷூடன் சேர்ந்து மது குடித்த போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் வெங்கடேஷை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...