டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டாக்கத்தியை காட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற 5 பேர் கைது

சிறுமுகை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை, கோவை, தஞ்சையை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நீலகிரியை சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடையின் ரூ.10 லட்சம் கலெக்‌ஷன் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.



அப்போது, சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேர், விஜய் ஆனந்தை வழிமறித்து அரிவாளலை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.



பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.





இந்நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜய் ஆனந்தை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (22), ஆகாஷ் (19), மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த ரவிக்கண்ணன் (19), கோவையை சேர்ந்த சதீஷ் (19) நான்கு பேரை கைது செய்தனர்.



இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த ஜூலை மாதம் இதே மேற்பார்வையாளரிடம் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (21), என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து பட்டாக் கத்தி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் செயின் பறிப்பு, கொள்ளை, இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...