திருப்பதி கோவிலுக்கு இவ்வளவு சொத்துக்களா? - வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தேவஸ்தானம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி இருப்பு, தங்க இருப்பு ஆகியவை குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதியை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்தன.

இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை. அடிப்படை ஆதாரம் அற்றவை என தெரிவிக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 30.6.2019 அன்று தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே ஒன்பது லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டு வைத்துள்ளது.

அதன்படி, வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7,339 கிலோ 740 கிராம் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலர் குழு முதலீடுகள் விஷயத்தில் செலுத்திய சிறப்பு கவனம் காரணமாக தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே எட்டு லட்ச ரூபாய் பணமும்,10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் டெபாசிட்டாக இருப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...