கோவையில் மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுவன் உயிரிழப்பு - புது வீட்டுக்கு சென்ற ஒரே வாரத்தில் சோகம்…!

புது வீட்டுக்கு சென்ற ஒரே வாரத்தில் பள்ளிச் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் குமார். கூலி வேலை செய்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் சூலூர் எஸ்.அய்யாபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் வெற்றிவேல் (16), செஞ்சேரிமலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், குமார் அண்மையில் புதிய வீடு கட்டியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக புது வீட்டில் தங்கியிருந்த நிலையில், யு.பி.எஸ் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று வெற்றிவேல் வீட்டில் இருந்த போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது சிறுவன் யு.பி.எஸ் ஐ ஆன் செய்ய முயன்றுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புது வீட்டிற்கு சென்ற ஒரே வாரத்தில் பள்ளிச் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...