கோவையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட வீடுகளை விற்பனை செய்யும் திமுக கவுன்சிலர் - ஆட்சியரிடம் மக்கள் மனு

தங்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை வார்டு கவுன்சிலர் சிவசக்தி, பிறருக்கு விற்பனை செய்வதாகவும், தங்கள் வீடுகளை தங்களுக்கே ஒதுக்கித் தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திமுக வார்டு கவுன்சிலர் தனியாருக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



மாவட்ட ஆட்சியரிடம் செல்வபுரம் காலனி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,

செல்வபுரம் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து அப்பகுதி மக்கள் வந்த வீடுகள் பழுதடைந்துள்ளதால், குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இன்னும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வேலை தாமதமாக நடைபெற்று வருகிறது.

24 மணி நேர குடிநீர் வழங்காமல் பைப்புகள் மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பு மற்றும் சிறுவாணி குடிநீர் வேலைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும் தற்பொழுது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளை இம்மாதத்திற்குள் அவர்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க கூடாது.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆறு லட்சம் ஏழு லட்சம் என விலை பேசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 78 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவசக்தி மற்றும் அவரது அண்ணன் மணிகண்டன்(திமுக செல்வபுரம் பகுதி செயலாளர்) ஆகியோர் சில நபர்களை அழைத்து வந்து புரோக்கர் மூலம் வீடுகளை விற்பனை செய்து வருகிறார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டுகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...