டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வால்பாறையில் வரும் 13ஆம் தேதி உண்ணாவிரதம் - கோவையில் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ அறிவிப்பு

கோவை வால்பாறை சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை தமிழக அரசு கைவிடக்கோரி வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மருத்துவ பணியாளர்கள் என யாரும் இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர்.



இதை தொடர்ந்து இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன் கூறியதாவது, இங்கு ஏற்கனவே வேலை செய்தவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்றார்.



இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மருத்துவ பணியாளர் பற்றாக்குறை பிரச்சனையை உடனடியாக தமிழக அரசிடம் தெரிவித்து மருத்துவர்களை பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டேன் டீ நிர்வாகத்தை மூடும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதால், டேன் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி வால்பாறையில் டேன் டீ தொழிலாளர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...