தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.


சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுவைப் பொறுத்து வரையில், எம்பிபிஎஸ், பொறியியல் போன்ற உயர்க்கல்வி சேர்க்கைக்கு தேவையான மிக முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி கொடுத்து அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல, 10ம் வகுப்பு அட்டவணையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாட தேர்வுகளுக்கு போதிய கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில்0 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர்1,11ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8.50 லட்சம் பேர் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...